குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

கொள்ளிடம், ஜூன் 4: ரேஷன் கார்டில் ஒரு உறுப்பினர் மூன்று முறை மட்டுமே இணையதளம் வாயிலாக பெயர் நீக்கம் செய்து திரும்பவும் சேர்க்க முடியும். இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமான விழிப்புணர்வை குடுமைப் பொருள் வழங்கல் துறை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கணவரை இழந்தோர் விவாகரத்து பெற்ற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உறுப்பினர் பெயர்களை நீக்க முடியும் என்ற சூழலில் இந்த கட்டுப்பாட்டினால் பாதிப்படைவது பெண்கள் தான் அதிகம்.

இதுபோன்ற நிபந்தனைகள் இருப்பது பொதுமக்களுக்கு தெரிவதில்லை. அப்படியே நீக்கம் செய்ய முடியவில்லை என்றால் வேறு வழியில் எவ்வாறு நீக்குவது என்ற வழிமுறையோ தீர்வோ தெரியவில்லை. வாடிக்கையாளர் சேவை மையம் மூலமோ அல்லது அரசின் செயலி மூலமோ தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை.எனவே குடிமை பொருள் அலுவலகங்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும். காலதாமதமினறி குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் நுகர்வோர் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: