அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு தீவிரமாக காட்டி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் வணிகங்களுக்கு முன்னுரிமை அணுகலை வழங்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 191 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் கட்டம் செப்டம்பர்- அக்டோபர் 2025 க்குள் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பிப்ரவரியில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை தொடங்கி வைத்தனர்.
ஜூன் மாத இறுதிக்குள் ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக வாஷிங்டன் குழு தற்போது புது டெல்லியில் உள்ளது. இருப்பினும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து நிலவும் பதட்டங்கள் இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அண்மைக் காலம் வரை ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வந்தது. ரஷ்யாவிடம் இந்தியா ஆயுதங்கள் வாங்கியது அமெரிக்காவுடன் நல்லுறவு ஏற்பட உகந்ததாக இல்லை. தற்போது அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்குவதால் இந்தியா உடனான உறவு முன்னேற்றம் அடையும் என்றும் தெரிவித்தார்.
The post இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அமைச்சர் லுட்னிக் பேச்சு appeared first on Dinakaran.