ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவும் பிரச்சனையில் சமாதானத்துக்கு வழியில்லை.
ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானத்துக்கு வழியில்லை. ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதாக பு.தா.அருள்மொழி தகவல் தெரிவித்துள்ளார். தந்தை, மகன் இடையே பிரச்சனை நிலவுவதால் எங்களால் சமரசம் செய்ய இயலவில்லை. அன்புமணி எப்போது வேண்டுமானாலும் தைலாபுரம் வந்து ராமதாஸை சந்திக்கலாம்.
பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
தைலாபுரம் இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள்மொழி, வடிவேல் ராவணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அன்புமணியுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
The post பாமக தலைவர் தான்தான் என்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளார்: வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேச்சு appeared first on Dinakaran.