ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்டோர் மண்டபம் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்த, இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பை சேர்ந்த ரவீந்திரன் (25), இவரது மனைவி அம்பிகா (25), மூன்று வயது மகன் ஆகியோர் பாம்பனில் இருந்து படகு மூலம் தப்பிச்சென்றனர். இவர்களை தலைமன்னார் அருகே படகோட்டியுடன் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
The post இலங்கை தமிழர் மூன்று பேர் கைது appeared first on Dinakaran.