அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவு; பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு: 8 பேர் படுகாயம்; ஒருவர் கைது

பவுல்டர்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் 54,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள பிணை கைதிகள் 58 பேரை இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் கொலராடோ, பவுல்டர் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் அமைதி பேரணி நடத்தினர். இதில்,ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

அப்போது பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று ஒருவர் கோஷமிட்டுக் கொண்டே மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில்,8 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் அவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் முகமது சப்ரி சொலிமான்(45) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எப்பிஐ) அதிகாரி டேன் போங்கினோ கூறுகையில்,இது தீவிரவாத தாக்குதல். எப்பிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து முக்கிய தகவல்களை சேகரித்து வருகிறோம். மேலும் விசாரணைக்கு பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் விவரம் தெரிவிக்கப்படும் என்றார்.

The post அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவு; பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு: 8 பேர் படுகாயம்; ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: