மோகனூர் காவிரி ஆற்றில் புதை குழிகள்

 

நாமக்கல், மே 30: மோகனூர் காவிரி ஆற்றில் மணல் திட்டுகளில் புதை குழிகள் இருப்பதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என நீர்வளத்துறை எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. கோடைக்காலம் துவங்கியது முதல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஆற்றின் பல பகுதிகள் மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் பல இடங்களில் புதை குழிகள், சுழல்கள் இருக்கிறது.

இதனால் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில், ஆற்றின் நடுப்பகுதியில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், காவிரி ஆற்றில், நிறைய புதை குழிகள், சுழல்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றுக்குள் அழைத்துச் செல்ல வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மோகனூர் காவிரி ஆற்றில் புதை குழிகள் appeared first on Dinakaran.

Related Stories: