விழுப்புரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை

*ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் போதைப்பொருள் விற்பனை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கேட்டறியப்பட்டது.

மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து விற்பனையை தடுத்திட வேண்டும்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிரக் செயலி குறித்து செயல்முறை விளக்கம் ஏற்படுத்தி இச்செயலியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்த விவரம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

காவல்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டாய்வு செய்திடவும், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், எஸ்.பி.சரவணன், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், கலால் உதவி ஆணையர் ராஜூ, கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: