நன்றி குங்குமம் தோழி
*தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
*புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
*தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது.
*தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு அருமருந்து.
*பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் உள்ள புரோட்டீன், சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
*தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
*தயிரில் உள்ள LACTO BACIL ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
*வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்ளலாம்.
*வெந்தயம்+தயிர் 1கப்பை அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.
*பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளுடன் தயிர் ‘ரைத்தா’ சாப்பிட்டால், வயிற்றுக்கு அதிக நன்மை உண்டாகும்.
*பெண்களுக்கு மெனோபாஸ் பருவத்தை எட்டும் பொழுது, உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
*வெண்டைக்காய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமலும், பிசுபிசுக்காமலும் இருக்கும்.
*தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக அருந்தலாம்.
*தயிர் கலந்த நீரில் வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை போட்டு வைத்தால் நிறம் மாறாது.
*தயிர் கொண்டு கை கழுவினால், மண்ணெண்ணை வாசம் போய்விடும்.
– சௌமியா சுப்ரமணியன், சென்னை.
The post தயிரில் உள்ள அற்புதங்கள்! appeared first on Dinakaran.