மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 9,347 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 111.25 அடியாகவும், நீர் இருப்பு 80.197 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.