சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,233 கன அடியில் இருந்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது. 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 109.33 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 77.462 டிஎம்சியாக உள்ளது.