11ம் வகுப்பு தேர்வில் 93.18% தேர்ச்சி

தேனி, மே 17: தேனி மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வில் 12 ஆயிரத்து 916 பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 ஆயிரத்து 35 பேர் தேர்ச்சி பெற்றனர். தேனி மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வினை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 141 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 156 மாணவர்கள், 6 ஆயிரத்து 760 மாணவியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 916 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 5 ஆயிரத்து 554 மாணவர்கள், 6 ஆயிரத்து 481 மாணவியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 35 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 93.18 ஆகும். இத்தேர்வில் தேனி மாவட்டம் தமிழ்நாடு அளவில் 13வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 24 வது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 13வது இடத்தை பிடித்து முன்னேறியுள்ளது.

The post 11ம் வகுப்பு தேர்வில் 93.18% தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: