88.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

கிருஷ்ணகிரி, மே 17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும், நேற்று பிளஸ் 1 தேர்ச்சி விபரங்கள் வெளியானது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 193 அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 10,472 மாணவர், 11,505 மாணவிகள் என மொத்தம் 21,977 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தேர்வினை எழுதினர். இதில் 8,806 மாணவர்கள், 10,602 மாணவிகள் என மொத்தம் 19,408 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.31 ஆகும். இது மாநில அளவில் 33வது இடமாகும். மொத்தமுள்ள 193 பள்ளிகளில் 40 பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post 88.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: