ஊத்தங்கரை, ஜூன் 4: மதுரையில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள்தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தர்கள் அழைப்பிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, அனுமன் தீர்த்தம், சிங்காரப்பேட்டை, காரப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள்தோறும் சென்று முருக பக்தர்கள், கோயில் பூசாரிகள், ஆன்மிக வாதிகள், தன்னார்வலர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜ நிர்வாகிகளை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். மாநாடு வெற்றி பெறும் வகையில், கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.
The post வீடு வீடாக முருக பக்தர்கள் அழைப்பு appeared first on Dinakaran.