செவ்வாழைப் பழ கேக்

தேவையானவை:

மைதா – 1 கப்,
கோதுமை மாவு – ¾ கப்,
கோகோ பவுடர் – ¼ கப்,
சர்க்கரைப் பொடி – ¾ கப்,
செவ்வாழைப் பழம் – 4,
பட்டர் – ¾ கப்,
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்,
பால் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – சிட்டிகை,
நட்ஸ் – ¼ கப்,
சாக்கோ சிப்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பவுலில் மைதா, கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலக்கவும். ஒரு பவுலில் செவ்வாழைப் பழங்களை நன்கு மசிக்கவும். அதனுடன் சர்க்கரைபொடி, வெண்ணெய் கலந்து அதில் சலித்த மாவு கலவையை சேர்த்து பால் சேர்த்து நன்கு கலக்கவும். பின் மாவில் வெனிலா எசன்ஸ் – நறுக்கிய நட்ஸ் சேர்த்து கலந்து பேக் செய்ய மோல்ட் எடுத்து, பட்டர் தடவி, மாவு தூவி தயார் செய்த கேக் கலவையை ஊற்றி, அதன் மேல் சாக்கோ சிப்ஸ் தூவி, மைக்ரோ வேர் ஓவனில் 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்து, 35 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் செவ்வாழைப்பழ நட்ஸ் கோகோ கேக் தயார்.

The post செவ்வாழைப் பழ கேக் appeared first on Dinakaran.