ரியாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது 4 நாள் அரசு முறை பயணத்தை நேற்று தொடங்கினார். முதல் நாடாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். ரியாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அன்புடன் வரவேற்றார். இதனை தொடர்ந்து இருவர் முன்னிலையில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பு ஆயுதங்களை சவுதிக்கு அமெரிக்க சப்ளை செய்ய புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வரலாற்று சிறப்பு மிக்க மிகப்பெரிய ஒப்பந்தம் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது. அதி நவீன போர் விமானங்கள், வானிலே தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பிற தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்திலும் அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார்.
The post சவுதிக்கு ரூ.12 லட்சம் கோடி ஆயுதம் சப்ளை: அதிபர் டிரம்ப் முன்பு ஒப்பந்தம் appeared first on Dinakaran.