கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர வரும் ஜூன் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர வரும் ஜூன் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 1.38 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முதலில் ஆரம்பித்த மாநிலம் தமிழ்நாடு. நுகர் பொருள் வாணிபக் கழகத்தினை கலைஞர் ஏற்படுத்தியதால்தான் தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர வரும் ஜூன் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: