கர்னல் சோஃபியா குரேஷி அளித்த பேட்டி: பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவுடு பொடியாக்கியுள்ளது. இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது. பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து, பாகிஸ்தான் இன்று அதிகாலை 1:40 மணிக்கு நடத்த முயன்ற அதிவேக ஏவுகணைக தாக்குதல் முறியடிக்கப்பட்டது. விமானப்படை தளங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது.
இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் பேட்டி : பாகிஸ்தான் தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகர் முதல் நல்லியா வரை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய ராணுவ தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது போல் தவறான தகவல் பரப்பப்படுகிறது. பாகிஸ்தானின் ஆயுத கிடங்குகள், தொழில்நுட்ப மையம், ரேடார் மையங்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே 5 இடங்களில் கடும் மோதல் நீடித்து வருகிறது. பதற்றம், மோதலை அதிகரிக்கக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுகிறோம்.
வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி: பொதுமக்கள் இந்திய அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைவதை நாங்கள் கண்டோம். நாட்டின் குடிமக்கள் அரசு மீது விமர்சனங்கள் வைப்பது பாகிஸ்தானுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏனென்றால் இது ஜனநாயகத்தின் அடையாளமாகும். பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பொய் பரப்பி வருகிறது. சூரத்தில் உள்ள விமானப்படை தளத்தை பாக். தகர்த்துவிட்டதாக கூறுவது தவறான தகவல். எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் ஆகும். இந்திய ஏவுகணைகள், ஆப்கானிஸ்தானை நோக்கி ஏவப்பட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மீது பல முறை தாக்குதல் நடத்தியது எந்த நாடு? என்பதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி ராஜ்குமார் தபா உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
The post பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய ராணுவ தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது போல் தவறான தகவல் : கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி appeared first on Dinakaran.