விடுமுறை துவங்கியதால் மக்கள் குவிகின்றனர்: தேக்கடி போட்டிங்கிற்கு டிமாண்ட்


மூணாறு: கோடை விடுமுறையை முன்னிட்டு தேக்கடியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் தேக்கடியும் ஒன்று. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே கரையோரப் பகுதியில் யானை, மிளா மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிப்பது தேக்கடியின் தனிச்சிறப்பு. இதனை அனுபவிக்கவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் தேக்கடியில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

இவர்கள் படகு சவாரி செய்ய கேரள வனத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 14 கி.மீ தூரம் சென்று திரும்பும் வனத்துறை படகு சவாரிக்கு கட்டணமாக ரூ.255, சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு சவாரிக்கு ரூ.450 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. காலை 7.30, 9.30, 11.15 மணி மற்றும் பிற்பகல் 1.45, 3.30 மணி என ஐந்து டிரிப்புகளில் படகுகள் இயக்கப்படுகின்றன. அதிகளவில் மக்கள் வருவதால், படகுகளில் இடம் கிடைக்காத நிலை உருவாகிறது.

The post விடுமுறை துவங்கியதால் மக்கள் குவிகின்றனர்: தேக்கடி போட்டிங்கிற்கு டிமாண்ட் appeared first on Dinakaran.

Related Stories: