அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் ஆட்குறைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இதர உளவு பிரிவில் ஆட் குறைப்பு மேற்கொள்ள அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என அமெரிக்க பத்திரிகை வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதில் சிஐஏவில் 1,200 பதவிகளை குறைக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆட் குறைப்பு பல ஆண்டுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதர பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான பதவிகள் குறைக்கப்படும்.

இதுகுறித்து சிஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கைகள் சிஐஏவில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை ஊட்டுவதற்கும், இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான பணியை நிறைவேற்றுவதன் உத்தியின் ஒரு பகுதியாகும் இது என குறிப்பிட்டுள்ளது.

The post அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் ஆட்குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: