தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பேட்டி

வாஷிங்டன்: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளன. இவ்விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ் அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடி அரசுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசின் முழு ஆதரவும் உள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஆகியோருடன் பேசினார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்தபடி, ‘தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.

பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவு உள்ளது. இரு நாடுகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். அதனால் தெற்காசியாவில் அமைதியை பேண முடியும்’ என்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் அளித்து வரும் ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்த ஆதரவு, தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

The post தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: