இன்று முதல் ரயில்வே டிக்கெட் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்போர் டிக்கெட் வைத்திருப்போர் இரண்டாம் மற்றும் ஏசி வகுப்புகளில் கட்டாயம் பயணிக்க அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்பார்ம் ஆகாத டிக்கெட்களை வைத்திருப்போர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க, டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வெயிட்டிங் டிக்கெட் வைத்திருப்போர், முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு இந்த திட்டத்தை ரயில்வே கொண்டுள்ளது.
அதேநேரத்தில் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, அந்த டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், தானாகவே காலாவதியாக, பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. அந்த முறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரயில் காத்திருப்பு டிக்கெட்டுக்கு ஏசி பெட்டி இல்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.