திருத்தந்தை பிரான்சிஸ் தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் என்ற சிறப்புக்குரியவர். அன்பு, அமைதி, இரக்கம், எளிமை ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்திருக்கிறார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதை விமர்சித்திருக்கிறார். தனக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை கூட அவர் தவிர்த்திருக்கிறார்.
அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அந்த வகையில் முற்போக்குக் குரலாக அவர் இருந்திருக்கிறார்.
ஏழைகளுக்கு உதவுங்கள் பசிக்கு எதிராகப் போராடுங்கள் இவைதான் அமைதிக்கான ஆயுதங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அன்பின் அடையாளமாக அமைதியின் அடையாளமாக போப்பின் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். வன்முறைக்கும், வெறுப்புணர்வுக்கும், போர்களுக்கும் எதிரான அவரது குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மாபெரும் மாற்றங்களை முன்னெடுத்த மாமனிதர் போப் ஆண்டவர் புகழ் வாழ்க அவர் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும், அன்பே எங்கும் நிறையட்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
The post வன்முறைக்கும், வெறுப்புணர்வுக்கும் எதிரான போப்பாண்டவரின் குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.