விசாரணையின் போது, விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும் தனது பெற்றோருக்கு இது தெரியவந்ததை அடுத்து வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால் விஜயகுமாருடன் சென்றதாகவும் சிறுமி கூறியுள்ளார். வழக்கை விசாரித்த உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ வழக்கிலிருந்து இளைஞரை விடுதலை செய்தது. ஆனால் கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயகுமார் மற்றும் காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதை தடுக்க வேண்டுமென்று விஜயகுமார் நினைத்திருந்தால் போலீசிடமோ அல்லது சமூக நலத்துறைக்கோ புகாரளித்திருக்க வேண்டும். வெளியூரில் தங்கியிருந்த போது சிறுமியுடன் உடலுறவில் இருந்த நிலையில், பின்னர் போக்சோ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணம் செய்து கொண்டதால் வழக்கை ரத்து செய்தால் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும். எனவே, கடத்தல் வழக்கில் விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை உறுதி செய்யப்படுகிறது. போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
The post போக்சோ வழக்கில் விடுதலையானவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.