காலணியை வைத்து கள்வரை கண்டுபிடித்த சென்னை கமிஷனருக்கு சல்யூட்: திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக்கோரிக்கையின் போது சங்கராபுரம் தா.உதயசூரியன்(திமுக) பேசியதாவது: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்து பார்த்து, விமான நிலையத்தில் கள்வர்களை கண்டுபிடித்த போலீசார். தமிழ்நாடு போலீசார்தான். அந்தக் காலத்திலேயே காலிலிருந்த சிலம்பைத் திருடியது, கோவலன் அல்ல என்பதை அப்போதே காவலர்கள் சுட்டிக்காட்டியதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்டுகிறேன். அப்படி காலணியை வைத்து, கள்வரைக் கண்டுபிடித்த சென்னை கமிஷனருக்கு ஒரு சல்யூட்டை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

புலனாய்வுத் துறையிலும் சரி, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காப்பதிலும் சரி, திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக செயல்படுகிறது. சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க 35 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டே அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டிக் கொடுக்க வேண்டும். பொன்பரப்பட்டு கிராமத்திற்க்கு அருகே அமைந்துள்ள பாப்பாங்கால் ஓடை குறுக்கே உள்ள அணைக்கட்டு மற்றும் தலைப்பு மதகினை புனரமைத்து தர வேண்டும். அவ்வாறு அவர் பேசினார்.

The post காலணியை வைத்து கள்வரை கண்டுபிடித்த சென்னை கமிஷனருக்கு சல்யூட்: திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: