இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 17ம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் வழிமுறைகளில் திருத்தம் வருவாய் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம், ரூ.3 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு தற்போது, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம், ரூ.5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.
அதில், 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது. மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம், ரூ.5 லட்சத்திற்கு மேல், ரூ.12 லட்சத்திற்குள்ள இருக்கும் குடும்பங்கள், 2 சென்ட்டுக்கு நில மதிப்பில், 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம், ரூ.12 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள், 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும். நகர்ப்புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post ஆட்சேபனையற்ற இடங்களில் குடியிருக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்கப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.