ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்

45வது லீக் போட்டியில் வெற்றி உற்சாகத்தில் மும்பை முந்தும் பதற்றத்தில் லக்னோ

  • ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் 45வது லீக் போட்டி, மும்பை வான்கடே அரங்கில் இன்று நடக்கிறது.
  • ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
  • அவற்றில் லக்னோ 6 போட்டிகளிலும், மும்பை ஒரே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
  • அந்த போட்டிகளில் அதிகபட்சமாக லக்னோ 214, மும்பை 196 ரன் எடுத்துள்ளன.
  • குறைந்தபட்சமாக மும்பை 132, லக்னோ 101 ரன்னில் சுருண்டுள்ளன.
  • இரு அணிகளும் கடைசியாக மோதிய 3 போட்டிகளிலும் லக்னோதான் வெற்றி வாகை சூடியுள்ளது.
  •  நடப்புத் தொடரில் ஏப். 4ம் தேதி நடந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோவிடம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை போராடி தோற்றது.
  •  இந்த தொடரில் இவ்விரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றி, தலா 4 தோல்விகள் மூலம் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளன.
  • மும்பை, கடைசி 5 போட்டிகளில் 4ல் வென்று உற்சாகமாக உள்ளது. லக்னோ, கடைசி 5 போட்டிகளில், 3 மற்றும் 5வது போட்டிகளில் தோல்வியை தழுவி பதற்றத்தில் உள்ளது.
  • மும்பை, வான்கடே அரங்கில் இந்த இந்த 2 அணிகளும் மோதிய 2 ஆட்டங்களிலும் லக்னோ தான் வெற்றியை ருசித்துள்ளது.

46வது லீக் போட்டியில் கில்லியாய் நிற்கும் டெல்லி சொல்லி அடிக்கும் பெங்களூரு

  • இன்று டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
  •  இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த 2 அணிகளும் 32முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
  •  அவற்றில் பெங்களூர் 19 முறையும், டெல்லி 12 முறையும் வெற்றியை அறுவடை செய்துள்ளன.
  •  இந்த அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பெங்களூர் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
  •  நடப்பு தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 8 போட்டிகளில் மோதி இருக்கின்றன.
  •  அவற்றில் டெல்லி 6-2, பெங்களூர் 5-3 என்ற கணக்கிலும் வெற்றி தோல்விகளை பெற்றுள்ளன.
  •  அதனால் புள்ளிப்பட்டியலில் டெல்லி 12, பெங்களூர் 10 புள்ளிகளுடன் உள்ளன.
  •  இந்த தொடரில் ஏற்கனவே ஏப்.10ம் தேதி பெங்களூர் சின்னசாமி அரங்கில் நடந்த 24வது லீக் ஆட்டத்தில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
  •  அடுத்த சுற்று வாய்ப்பை விரைந்து கைப்பற்ற இரு அணிகளுக்கும் தொடர் வெற்றிகள் அவசியம். எனவே அக்சர் படேல் தலைமையிலான டெல்லியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரும் இன்று வெற்றிக்கு தீவிரம் காட்டும்.
  • டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இதுவரை இந்த அணிகள் மோதிய 10 ஆட்டங்களில் பெங்களூர் 6-4 என்ற கணக்கில் முன்னிலையை தொடர்கிறது.

The post ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: