வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிட்டத்தட்ட 6,502 நபர்களுக்கு தீருதவி தொகை, கருணைத் தொகை மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூபாய் 71 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிற்கென மாநில அளவில் காவல் துறைத் தலைவர், திராவிட மாடல் ஆட்சியில் இது ஒரு புதிய முயற்சியாக, கூடுதல் காவல் துறைத் தலைவர் மற்றும் மாவட்ட அளவில் 38 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளடக்கிய தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, அடித்தட்டு மக்கள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பாட்டாளி மக்கள், தொழில் முனைவோர்கள் என அனைத்து மக்களுக்குமான பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே, வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றி உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க நிர்வாகத் திறனின்கீழ், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த மானியமானது, இறுதி மானியம் அல்ல, இனியும் தொடரக்கூடிய திராவிடமாடல் ஆட்சியின் உறுதி மானியம். இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி பட்டியலின பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்: அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.