மோடி அரசில் ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ராபர்ட் வதேரா குறித்து பாஜ விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஊழலை ஒழிப்பது, ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பது மற்றும் அபகரிக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் திருப்பி தருவது பிரதமர் மோடி அரசின் உறுதியாகும். காந்தி குடும்பம் தனது கஜானாவை மக்களின் பணத்தால் நிரப்பி இருந்தால் ஒவ்வொரு பைசாவும் அவர்களிடம் இருந்து மீட்கப்படும். ராபர்ட் வதேரா நாட்டின் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை கருதுகிறார்.

ேமாடி அரசு ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளியேவருபவர்களை சிறைக்கு அனுப்புவதை உறுதி செய்கிறார்கள். மோடி அரசில் ஊழல் மீதான பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையின் கீழ் ஊழல்வாதிகள் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒரு கடுமையான போர் நடத்தப்பட்டுள்ளது. ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் பெயர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் இடம்பெற்றுள்ளது. சோனியா காந்தியின் பெயர் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடம்பெற்றுள்ளது. காந்தி குடும்பம் ஓரு ஊழல் குடும்பம்” என்றார்.

அரசுக்கு எதிராக போராட்டம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகம் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதற்காக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து முடிவு செய்வதற்காக நாளை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொது செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்புக்களின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான திட்டத்தை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post மோடி அரசில் ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ராபர்ட் வதேரா குறித்து பாஜ விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: