இன்னும் ஓராண்டில் நக்சல்கள் முற்றிலும் ஒழிப்பு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி


நீமுச்: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 86வது உதய தின விழா மத்தியபிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “இந்தியாவில் தற்போது நான்கு மாவட்டங்களில் மட்டுமே நக்சல் பாதிப்பு உள்ளது. 2026 மார்ச் 31க்குள் நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள். மத்திய ஆயுத காவல்படைகள்(சிஏபிஎப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப்), குறிப்பாக சிஆர்பிஎப்பின் கோப்ரா பிரிவு நக்சல்களை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவது, வடகிழக்கில் அமைதியை உறுதி செய்வது, நக்சல் இயக்கத்தை நான்கு மாவட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது என எதுவாக இருந்தாலும் தேசிய பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் அளித்த பங்கு இன்றியமையாதது. சிஆர்பிஎப்பின் துணிச்சல், தியாகம் ஆகியவற்றை விவரிக்க எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் போதாது என்றார்.

The post இன்னும் ஓராண்டில் நக்சல்கள் முற்றிலும் ஒழிப்பு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: