மின்சாரம் தாக்கி தம்பதி, பாட்டி பலி 2 பேர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் 45வது நாள் பூஜை நேற்று நடைபெற இருந்தது. இதற்காக மைக்செட் கட்டும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மைக்செட் உரிமையாளர் திருப்பதி(28) நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார். அப்போது வயரின் மறுமுனையை நடுவில் சென்ற ஒரு வயருக்கு மேல் தூக்கி போட்டுள்ளார். அது அங்குள்ள டிரான்ஸ்பார்மரின் உயர் மின்னழுத்த வயரில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து, திருப்பதி அலறினார்.

சத்தம் கேட்டு 7 மாத கர்ப்பிணியான அவரது மனைவி லலிதா(25) ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். இதில் மின்சாரம் இவர் மீதும் தாக்கியது. இவர்களின் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த திருப்பதியின் பாட்டி பாக்கியம்(65) மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், திருப்பதியின் தம்பி தர்மர்(22), உறவினர் மகன் கவின்மாதவன்(17) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

The post மின்சாரம் தாக்கி தம்பதி, பாட்டி பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: