சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உயர் அழுத்த கேபிள் பழுது சரிசெய்யப்பட்டு, 8 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.