தப்புக்கு மேல தப்பு: சிங்குக்கு போச்சு டப்பு…

மும்பை அணியுடனான ஐபிஎல் 16வது லீக் போட்டியில் லக்னோ வெற்றி பெற்றது. இப்போட்டியில் 46 ரன் குவித்த மும்பை வீரர் நமன் திர்ரை அவுட் செய்த குஜராத் அணி பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங், நோட்புக்கில் அவர் அவுட் ஆனதை எழுதுவதை போல் சைகை செய்து கொண்டாடினார். ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறும் வகையில் 2வது முறையாக அவர் நடந்து கொண்டதால், போட்டிக்கான அவரது சம்பளத் தொகையில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதற்கு முன், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அந்த அணி வீரர் பிரியன்ஷ் ஆர்யாவை வீழ்த்தியபோதும், இதே தவறை செய்த திக்வேஷ் சிங்கிற்கு 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, மும்பையுடனான போட்டியில் பந்து வீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post தப்புக்கு மேல தப்பு: சிங்குக்கு போச்சு டப்பு… appeared first on Dinakaran.

Related Stories: