அதையடுத்து, ரியான் பராக் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் இணை சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய ஜெய்ஸ்வால் (45 பந்து, 67 ரன், 5 சிக்சர், 3 பவுண்டரி), 14வது ஓவரில் அவுட்டானார். பின் வந்த நிதிஷ் ராணா (12 ரன்), ஜேன்சன் பந்தில், மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார். பின், ஷிம்ரோன் ஹெட்மயர், பராக்குடன் இணை சேர்ந்தார். 19வது ஓவரில், அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை எதிர்கொண்ட ஹெட்மயர் (12 பந்து, 20 ரன்), மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
பின்னர், துருவ் ஜுரெல் உள் வந்தார். இருவரும் கடைசி ஓவரில் அதிரடியாக 20 ரன் குவித்தனர். அதனால், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. ரியான் பராக் (43 ரன்), துருவ் ஜுரெல் (13 ரன்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில், பெர்குசன் 2, அர்ஷ்தீப், மார்கோ ஜேன்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 206 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணி துவக்க வீரர்கள் சொதப்பலாக ஆடி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பிரியன்ஸ் ஆர்யா 0, பிரப்சிம்ரன் சிங் 17, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 10, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 ரன்னில் அவுட் ஆகி அணியை பரிதவிக்க விட்டனர். அதே சமயம், கிளென் மேக்ஸ்வெல் 30, நேகா வதேரா 62 ரன் குவித்து அணியின் ஸ்கோரை உயர செய்தனர். பின் வந்தோர் சரியாக ஆடாததால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் மட்டுமே எடுத்து, 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
The post பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.