வெற்றி பாதைக்கு திரும்புமா சன்ரைசர்ஸ்? குஜராத்துடன் இன்று மோதல்

ஐதராபாத்: ஐபிஎல் போட்டியில் இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற உள்ள 19வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
* ஐதராபாத் அணிக்கு இது 5வது லீக் போட்டி. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
* குஜராத் அணி இன்று 4வது லீக் போட்டியில் களமிறங்குகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.
* ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத், வெற்றிப் பாதைக்கு திரும்ப சொந்த களத்தில் இன்று கூடுதல் வேகம் காட்டும்.
* ஹாட்ரிக் வெற்றியை பெற சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் முனைப்புக் காட்டும்.
* இவ்விரு அணிகளும் ஐபிஎல் களத்தில் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் குஜராத் 3 போட்டிகளிலும், ஐதராபாத் ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. எஞ்சிய ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக குஜராத் 199, ஐதராபாத் 195 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக குஜராத் 162, ஐதராபாத் 154 ரன் எடுத்துள்ளன.
* இன்றைய போட்டியில் இந்த அணிகள் இரண்டும் முதல் முறையாக ஐதராபாத்தில் களம் காண உள்ளன.

The post வெற்றி பாதைக்கு திரும்புமா சன்ரைசர்ஸ்? குஜராத்துடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: