பின் வந்த அபிஷேக் போரெல், ராகுலுடன் இணை சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த இணை, 54 ரன் சேர்த்திருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா வீசிய ஓவரில், அபிஷேக் (33 ரன்) அவுட்டானார். பின், கேப்டன் அக்சர் படேல் உள் வந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவரும் 21 ரன்னில் வெளியேறினார். அதையடுத்து சமீர் ரிஸ்வி, ராகுலுடன் இணை சேர்ந்தார். 12வது ஓவர் முடிவில் மும்பை 100 ரன்னை கடந்தது. கலீல் அகமது வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சமீர் ரிஸ்வி (20 ரன்), ஜடேஜாவிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
20வது ஓவரை வீசிய பதிரனா வீசிய மந்திரப் பந்தில் ராகுல் (51 பந்து, 77 ரன், 3 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். அடுத்த பந்தில், அசுதோஷ் சர்மா ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில், டெல்லி, 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்தது. பின்னர், 184 ரன் வெற்றி இலக்குடன் சென்னை களமிறங்கியது. துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே ஆடினர். முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் அவரிடமே கேட்ச் தந்து ரவீந்திரா (3 ரன்) வெளியேறினார்.
பின், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சொதப்பலாக ஆடி, ஸ்டார்க் பந்தில், 5 ரன்னில் அவுட்டானார். அதையடுத்து 3வது விக்கெட்டுக்கு ஜோடியாக விஜய் சங்கர் களமிறங்கினார். இந்த ஜோடியும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. கான்வே (13 ரன்), சிவம் துாபே (18 ரன்), ஜடேஜா (2 ரன்) சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.
அதனால், 11 ஓவர் முடிவதற்குள், 74 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து, சென்னை அணி பரிதாப நிலையில் இருந்தது. மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த விஜய் சங்கருடன், தோனி இணை சேர்ந்தார். இவர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், 20 ஓவர் முடிவில் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் மட்டுமே எடுத்தது. விஜய் சங்கர் 69, தோனி 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர். அதனால், 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
The post ஐபிஎல் 17வது லீக் போட்டி: சொந்த மண்ணில் நொந்த சென்னை: டெல்லிக்கு ஹாட்ரிக் வெற்றி appeared first on Dinakaran.