இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது. ஆதாரங்கள் இல்லாமல் தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளது. எனவே, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி ஞானசேகரன் மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு சென்னை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ராஜலட்சுமி முன்பு ஞானசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மகளிர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல்: மகளிர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.