மாநகராட்சியுடன் இணைந்து குட்கா பொருட்கள் ஒழிக்கும் பணி தீவிரம்; சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளது: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த காலங்களை விட தற்போது புள்ளிவிபரங்களின் படி குற்றங்கள் குறைந்துள்ளது என்றும், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்த குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழித்து வருகிறோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் 43வது அகில இந்திய காவல் குதிரைபேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் தமிழக காவ்லதுறை சார்பாக உதவி கமிஷனர்கள், 9 ஆண் குதிரையேற்ற வீராகள் மற்றம் 1 ெபண் குதிரையேற்ற வீராங்கனை ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழக காவ்லதுறை அணியின் ஏஎஸ்பி ஷூபம் நாகர்கோஜ் வெள்ளி பதக்கமும், உதவி கமிஷனர் அஜய் தங்கம், வெண்கல பதக்கம் பெற்றார்.

முதல் நிலை பெண் காவலர் சுகன்யா பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம் பெற்றார். முதல் நிலை காவலர் மணிகண்டன் நீலம் தண்டுதல் பிரிவிில் 4வது இடமும், குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் வெள்ளி பதக்கமும் பெற்றனர். எனவே வெற்றி பெற்ற அனைவருக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கமிஷனர் அருண் கலந்து ெகாண்டு பதக்கம் ெவன்ற சென்னை பெருநகர குதிரைப்படையை சேர்ந்த முதல் நிலை பெண் காவலர் சுகன்யா, மணிகண்டன், குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் ஆகியோருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன், தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களிடம் பேசியதாவது: சென்னையில் பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் அவர்களின் நலன் தான் முக்கியது. புள்ளிவிபரங்களை வைத்து பார்க்கும் போது நன்றாக குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை காவல்துறை பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை அதிகமாக பிடித்து வருகிறோம். குட்கா பயன்படுத்தும் பழக்கம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநகராட்சியுடன் இணைந்து குட்கா பொருட்கள் ஒழிக்கும் பணி தீவிரம்; சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளது: போலீஸ் கமிஷனர் அருண் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: