சட்டப்பேரவையில் நேற்று வேளாண் – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: விவசாயிகள் தற்கொலை அதிமுக ஆட்சி காலத்தின் சாதனை என்று சொல்லலாம். அதாவது, அதிமுக ஆட்சியில் 47 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனால், அவர்கள் உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள், இந்த ஆட்சி என்ன செய்தது என்று எங்களை கேட்கிறார்கள். கடந்த ஆட்சியில் 47 விவசாயிகள் இறந்ததற்கு சுமார் ரூ.2 கோடியே 76 லட்சம் உங்கள் அரசாங்கமே நிவாரணமாக கொடுத்திருக்கிறது.
ஆனால், திமுக ஆட்சியில், வேளாண்மை துறைக்கு தாராளமாக நிதி ஒதுக்கி, எண்ணிலடங்காத சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் தென்னைக்கு என்று தனியாக எதுவும் செய்யவில்லை. தென்னை வாரியம் மூலமாகத்தான் திட்டங்களை கொண்டு வந்தார்கள். நெல் சாகுபடியிலும் கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் நாங்கள் அதிகமாக உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக ஆட்சியில் 47 விவசாயிகள் தற்கொலை appeared first on Dinakaran.