பிஇ, பிடெக் படிப்பில் சேர வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி (சிஇஜி) அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ஏசிடி) மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி) குரோம்பேட்டை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி (எஸ்ஏபி) ஆகிய கல்லூரிகளில் 2025-26ம் ஆண்டு பி.இ., பி.டெக்., மற்றும் பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு cfa.annauniv.edu/cfa என்ற இணையதளம் மூலம் வருகிற 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனும் வகையின் கீழ் இதே படிப்புகளுக்கு மேற்சொன்ன கல்லூரிகளுக்கு cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக ஜூன் 6 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

The post பிஇ, பிடெக் படிப்பில் சேர வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: