இந்த நடைமுறையாலும், இ-பாஸ் நடைமுறையாலும் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இ-பாஸ் நடைமுறையை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுற்றுலா கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதனால் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 24 மணி நேர முழு கடையடைப்பு போராட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் நடந்தது.
இதனால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிறு பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கடைகள்கூட ஊட்டியில் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் திறக்கப்படவில்லை. இதனால் உணவு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வடை, போண்டா போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு பசியை போக்கிக்கொண்டனர். சிலர் அம்மா உணவகம் இருப்பதை அறிந்து கொண்டு, அங்குச் சென்று உணவு வாங்கி சாப்பிட்டனர். இதனால் அம்மா உணவகம் களைகட்டியது. சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. கடையடைப்பு காரணமாக பலர் விடுதிகளில் ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அரசு பேருந்துகள் மட்டும் வழக்கம்போல் இயங்கின.
The post இ-பாஸ் நடைமுறையை கைவிடக்கோரி நீலகிரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு: சுற்றுலா பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.