பைக் மீது லாரி மோதல்; சென்னை திருமங்கலம் போலீஸ்காரர் பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (27). இவர் சென்னை திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆணையருக்கு டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஜெகன் நேற்று தனது பைக்கில் மணியம்பட்டு கிராமத்தில் இருந்து திருவலம் நோக்கி சென்றார். பெல் நிறுவனம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவரது பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதல்; சென்னை திருமங்கலம் போலீஸ்காரர் பலி appeared first on Dinakaran.

Related Stories: