பயணிகள் மகிழ்ச்சி..கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!!

சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களில் பலர், குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலாக்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போதும், இதேபோல் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், பயணிகள் வசதிக்காக கூடுதல் விமான சேவைகள் இயக்குவதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம் முழுவதும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 50,000 ஆக இருந்தது. தற்போது அது 55 ஆயிரத்திற்கும் மேல் 60 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. சென்னை-இலங்கை இடையே ஏர் இந்தியா நிறுவனம் வாரம் 7 விமானம் இயக்கி வந்த நிலையில் 10ஆக அதிகரித்தது.

The post பயணிகள் மகிழ்ச்சி..கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: