ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி காண்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான். எந்த திட்டத்தை போட்டாலும் அதை முறியடிக்கும் வலிமை நம்மிடம் உள்ளது. நம்மிடம் இருந்து வெற்றியை பறிக்க பல எதிரிகளை உருவாக்குவார்கள்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய திமுகவினருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று (30.03.2025) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய மு.க. ஸ்டாலின் “பாஜக பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்கி, அதன் மூலம் நாடகங்களை நடத்தி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக நாடகமாடியது, ஆனால் அது தமிழக மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.பல்வேறு கோணங்களில் பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள். நாடகங்கள் நடத்துவார்கள். இதுபோன்ற நாடகங்களை 75 ஆண்டுகளாக ஏன் அதற்கும் முன்னதாகவே இருந்து பார்த்து கொண்டு வருகிறோம்.

ஒன்றிய பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், திமுகவும் முறியடித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்.

திமுக 2026 தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, அதற்கு பிறகு நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெல்லும். திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது ஆகியவை எங்கள் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன. திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது ஆகியவை எங்கள் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன.

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவது எங்கள் இலக்கு. பாஜகவின் பண பலம் அனைத்தும் தோல்வியடையும்” எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி காண்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: