இவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை தனது சொந்த செலவினங்களுக்கும், மற்றும் சொத்துக்கள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான ரூ. 158 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது தேக்சந்தானி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான துபாயில் உள்ள வீடு, மும்பை மற்றும் புனேயில் உள்ள ரூ. 44 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது
அரியானாவில் தனியார் மால் பறிமுதல்
அரியானா மாநிலம் சோனிபட்டில் டிடிஐ இன்ப்ராஸ்டரக்சர் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகம்(மால்) ஒன்று குண்ட்லி ஜிடி சாலையில் உள்ளது. பணமோசடி புகாரில் அமலாக்கத்துறையினர் டிடிஐ இன்ப்ராஸ்டரக்சர் நிறுவனத்தின் மால் உள்பட ரூ.5.61 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது.
The post வீடு கட்டித்தருவதாக 1700 பேரிடம் ரூ.400 கோடி மோசடி: ரூ.44 கோடி சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.