ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்

10வது லீக் போட்டியில் சளைக்காத சன்ரைசர்ஸ் – டெல்லியுடன் மோதல்

  • டெல்லி கேபிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் 10வது லீக் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
  •  டெல்லி தனது சொந்தக் களங்களில் ஒன்றான விசாகப்பட்டினத்தில் தனது 2வது ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.
  •  இந்த 2 அணிகளும் மோதிய 24 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் 13, டெல்லி 11 ஆட்டங்களில் வென்றுள்ளன.
  •  இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் 266, டெல்லி 207 ரன் விளாசியுள்ளன.
  •  குறைந்த பட்சமாக சன்ரைசர்ஸ் 116, டெல்லி 80 ரன் எடுத்துள்ளன.
  • டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி 5 ஆ ட்டங்களில் டெல்லி 3, சன்ரைசர்ஸ் 2 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன. எனினும் கடைசி 2 ஆட்டங்களையும் சன்ரைசர்ஸ் தான் கைப்பற்றியுள்ளது.
  •  இந்த 2 அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் டெல்லி 3-2, சன்ரைசர்ஸ் 2-3 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன.
  •  நடப்புத் தொடரில் டெல்லி முதல் ஆட்டத்தில் லக்னோவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
  •  முதல் ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ், தனது 2வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

11வது லீக் போட்டியில் அடிபட்ட சிங்கம் சிஎஸ்கே- வெற்றிக்கு ஏங்கும் ஆர்ஆர்

  • ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) – சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதும் 11வது லீக் ஆட்டம் இன்று இரவு கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த 2 அணிகளுக்கும் இது 3வது ஆட்டம்.
  •  சிஎஸ்கே, சொந்த களமான சென்னையில் விளையாடிய 2 ஆட்டங்களில், ஒன்றில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொன்றில் பெங்களூரிடம் 50 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
  •  ராஜஸ்தான் தான் விளையாடிய 2 ஆட்டங்களில், சன்ரைசர்சிடம் 44 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது.
  •  இரு அணிகளும் 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் சென்னை 16 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 13 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
  •  இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 246, ராஜஸ்தான் 223 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக ராஜஸ்தான் 126, சென்னை 109 ரன் எடுத்துள்ளன.
  •  இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
  •  இந்த அணிகள் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 1-3 என்ற கணக்கில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. சென்னை 2-3 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை அடைந்துள்ளது.

The post ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: