இருப்பினும், 14வது ஓவரில் முஜிபுர் ரஹ்மான் பந்தில் ரையான் ரிக்கெல்டனிடம் கேட்ச் தந்து ஜோஸ் பட்லர் (39 ரன்) ஆட்டமிழந்தார். பின், மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான், சாய் சுதர்சனுடன் இணை சேர்ந்தார். ஆனால், 16வது ஓவரை வீசிய பாண்ட்யா பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் தந்து ஷாருக்கான் 9 ரன்னில் வெளியேறினார். அதையடுத்து, ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் உள்வந்தார். அற்புதமாக ஆடி 63 ரன் குவித்திருந்த சாய் சுதர்சன், 18வது ஓவரின் கடைசி பந்தில் டிரென்ட் போல்ட் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார்.
அடுத்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் தெவாட்டியா ரன் அவுட்டானார். தீபக் சாஹர் வீசிய அடுத்த பந்தில் ரூதர்போர்ட் (18 ரன்) சான்ட்னரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். சத்யநாராயணா ராஜு வீசிய கடைசி ஓவரில் ரஷித் கானும், சாய் கிஷோரும் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2, போல்ட், சாஹர், முஜிபுர், சத்யநாராயணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை வீரர்கள் களமிறங்கினர்.
The post ஐபிஎல் 9வது லீக் போட்டி குஜராத் 196 ரன் குவிப்பு appeared first on Dinakaran.