9வது வீரராக வந்த ‘தல’ ரசிகர்கள் கடும் அதிருப்தி

சென்னையில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது, 12.5 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட் இழந்து 80 ரன் மட்டுமே எடுத்து பரிதவித்தது. அந்த நிலையில் அடுத்தடுத்த வீரர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, 9வது வீரராக, ரசிகர்களால் ‘தல’ என அன்போடு அழைக்கப்படும் தோனி களமிறங்கினார். அதைக் கண்டு சென்னை ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 5 அல்லது 6வது வீரராக தோனி வந்திருந்தால் போட்டியின் போக்கை மாற்றியிருக்க முடியும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதே கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, இர்பான் பதான் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

The post 9வது வீரராக வந்த ‘தல’ ரசிகர்கள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: