தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. சில சமயம் குறைந்தால், பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 14ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,400 என்ற உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் ஓரிரு நாள் தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து கடந்த 18ம் தேதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது.

அதாவது, 18ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.320, 19ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 என்று உயர்ந்தது. இதன் ஒரு பகுதியாக 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 480க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.66,160க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் மேலும் குறைவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,230க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.65,840க்கு விற்பனைனது. அதேபோன்று, வெள்ளியின் விலையிலும் மாற்றம் காணப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: