ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி : ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாளுக்குநாள் பல்கிப் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டர் தொலைவு வரை 10வழிச் சாலைகளாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு முன்வருமா? என நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,” குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து அடர்த்தி, நெடுஞ்சாலை இணைப்புக்கான அவசியம், முன்னுரிமை தேவை, போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதாக கூறினார். அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்ச்சத்திரம் – வாலாஜாபாத் சாலைப் பணிகள் எப்போது முடிவடையும் என டி.ஆர்.பாலு எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூர்- காரைப்பட்டி, காரைப்பட்டி-வாலாஜாபாத் என ஸ்ரீபெரும்புதூர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்ரீபெரும்புதூர்-காரைப்பட்டி சாலைப் பணிகள் 2025 ஏப்ரல் இறுதியிலும், அடுத்த பகுதியான காரைப்பட்டி-வாலாஜாபாத் சாலைப் பணிகள் 2026 அக்டோபர் மாதத்திலும் நிறைவடையும்” என தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: