இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களுக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
The post கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு! appeared first on Dinakaran.